அமைச்சரின் வீட்டை முற்றுகையிட முயன்ற தீபா ஆதரவாளர்கள் 105 பேர் கைது
திருச்சியில் அமைச்சரின் வீட்டை முற்றுகையிட முயன்ற தீபா ஆதரவாளர்கள் 105 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்க கோரி
தமிழக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று(சனிக்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்தநிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை எம்.ஜி.ஆர்.சிலை அருகே நேற்று தீபா ஆதரவாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன் தலைமையில் திரண்டனர். அப்போது அவர்கள், சட்டசபையில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் சசிகலாவின் ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க விடக்கூடாது என்று கூறி கோஷம் எழுப்பினார்கள்.
105 பேர் கைது
பின்னர் காந்திமார்க்கெட் பகுதியில் உள்ள அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் வீட்டை முற்றுகையிட சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதில் ஒரு பிரிவினர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 23 பெண்கள் உள்பட 105 பேரை போலீசார் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர். அப்போது அவர்கள் சசிகலாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.
மணப்பாறை
இதேபோல திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும், தீபா ஆதரவாளர்களும் நேற்று காலை ஒன்று திரண்டு மணப்பாறை பஸ் நிலையம் எதிரே உள்ள பயணிகள் விடுதி முன்பு நின்று கோஷங்கள் எழுப்பினர். அப்போது அவர்கள் அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம், எம்.எல்.ஏ.க்கள் நியாயமாக செயல்பட வேண்டும், சுயமாக முடிவெடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் மருங்காபுரி முன்னாள் எம்.எல்.ஏ. சின்னச்சாமி தலைமையில் ஊர்வலம் நடத்த முயற்சி செய்தனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்த போலீசார் ஊர்வலம் செல்ல முயன்ற 121 பேரை கைது செய்தனர்.
மண்ணச்சநல்லூர்-முசிறி
அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்திருப்பதை கண்டித்து முன்னாள் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மண்ணச்சநல்லூர் எதுமலை பிரிவு ரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 149 பேரை போலீசார் கைது செய்தனர்.
முசிறி கைகாட்டியில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ பிரின்ஸ் தங்கவேல் தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர் சுப்பு, முன்னாள் எம்.எல்.ஏ ரத்தினவேல், முன்னாள் பேரூராட்சி தலைவர் யோகநாதன், தீபா பேரவை நிர்வாகிகள் மதி, ஆஞ்சிகுமார் மற்றும் நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு ஊர்வலமாக செல்ல முயன்றனர். ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி மறுத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து முசிறி அங்காளம்மன் கோவில் அருகே விளக்க கூட்டம் நடைபெற்றது.

Next Story