வீராணம் ஏரியின் நீர்மட்டம் 38.95 அடியாக குறைந்தது
வீராணம் ஏரியின் நீர்மட்டம் 38.95 அடியாக குறைந்துள்ளது. சென்னைக்கு வினாடிக்கு 3 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
வீராணம் ஏரி
காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. 16 கிலோ மீட்டர் நீளம், 5.6 கிலோ மீட்டர் அகலம், 48 கிலோ மீட்டர் சுற்றளவுடன் பரந்து விரிந்து காணப்படும் இந்த ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
வீராணம் ஏரியின் மொத்த நீர் மட்டம் 47.50 அடியாகும். இதன் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இது மட்டுமின்றி சென்னை நகர மக்களின் தாகத்தை தணிப்பதிலும் இந்த ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம் சென்னைக்கு வினாடிக்கு 76 கன அடி நீர் கொண்டு செல்லப்பட்டு நகர மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
பாசனத்துக்கு தண்ணீர் திறக்கவில்லை
பருவமழை பொய்த்தபோதிலும் மேட்டூர் அணையில் இருந்து கொள்ளிடம் கீழணைக்கு காவிரி நீர் கொண்டு வரப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால் வறண்டு கிடந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. 43.50 அடியை எட்டியபோது, கீழணையில் ஷட்டர் அடைக்கப்பட்டு, தண்ணீர் நிறுத்தப்பட்டது. ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
நீர் மட்டம் குறைந்தது
சென்னைக்கு மட்டும் குடிநீருக்காக வினாடிக்கு 76 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பப்பட்டது. இதன்காரணமாக ஏரியின் நீர்மட்டம் மளமளவென குறைந்தது. அதற்கு தகுந்தாற்போல் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதும் குறைக்கப்பட்டது.
நேற்று முன்தினம் நிலவரப்படி ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 9 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 38.95 அடியாக இருந்தது. இதனால் ஏரியில் இருந்து சென்னைக்கு அனுப்பும் தண்ணீரின் அளவு 9 கன அடியில் இருந்து 3 கன அடியாக குறைக்கப்பட்டது. அதாவது ஒரே நாளில் 6 கன அடி தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஏரியின் நீர்மட்டம் 39 அடியாக குறைந்ததும், சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு ஏரியின் நீர்மட்டம் 39 அடிக்கு கீழ் குறைந்தபோதிலும், வினாடிக்கு 3 கன அடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தொடர்ந்து குடிநீர் அனுப்பி வைக்கப்படுமா? அல்லது நிறுத்தப்படுமா? என்பது பற்றி இன்று(திங்கட்கிழமை) தெரியும் என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story