ஓசூரில் குடியிருப்பு பகுதியில் குப்பை கிடங்கு அமைக்கும் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், ராயக்கோட்டை சாலை அட்கோ குடியிருப்பு பகுதி 10-ல், 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு உள்வட்ட சாலையையொட்டி, நகராட்சி பூங்கா அருகே குப்பை கிடங்கு அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இந்தநிலையில், குப்பை கிடங்கு அமைய உள்ள இடத்தை சீரமைக்க நேற்று பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு, பணிகள் நடைபெற்றது.
இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், நகராட்சி பணியாளர்களை முற்றுகையிட்டு, குடியிருப்பு பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குடியிருப்பு பகுதியில் குப்பை கிடங்கு அமைத்தால் மக்களுக்கு சுவாச கோளாறு போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, நகர பகுதியை தாண்டி, வேறு எங்கேனும் குப்பை கிடங்கை அமைத்துக்கொள்ளுமாறும் வாக்குவாதம் செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து, ஓசூர் டவுன் போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து பணிகள் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story