ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க கோரி அனைத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த விளக்க ஆர்ப்பாட்டம்


ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க கோரி அனைத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த விளக்க ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Feb 2017 4:15 AM IST (Updated: 24 Feb 2017 7:08 PM IST)
t-max-icont-min-icon

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க கோரி கடலூரில் அனைத்து தொழிற்சங்கத்தினர்

கடலூர்,

ஆர்ப்பாட்டம்

கடலூர் மண்டல அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கடலூர் அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு வேலைநிறுத்த விளக்க ஆர்ப்பாட்டம் மற்றும் வாயிற்கூட்டம் நடைபெற்றது. இதற்கு தொ.மு.ச. தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் ஜான்விக்டர், தொழிலாளர் விடுதலை முன்னணி பொதுச்செயலாளர் ஞானப்பிரகாசம், மறுமலர்ச்சி தொழிற்சங்க தலைமை நில செயலாளர் ரமேஷ், தேசிய முற்போக்கு தொழிற்சங்க பொருளாளர் தங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாட்டாளி தொழிற்சங்க தலைவர் ஜெயசங்கர் வரவேற்று பேசினார்.

தொ.மு.ச. பேரவை செயலாளர் பாண்டியன், இணைச்செயலாளர் தங்க ஆனந்தன், மறுமலர்ச்சி தொழிற்சங்க முன்னணி செயலாளர் மணிமாறன் பாட்டாளி தொழிற்சங்க பேரவை பொருளாளர் ராமலிங்கம், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில பொருளாளர் தங்க அரச்செல்வம், தேசிய முற்போக்கு தொழிற்சங்க பொதுச்செயலாளர் தண்டபாணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஓய்வூதியம் வழங்க வேண்டும்

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், ஓய்வூதியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும், 1–4–2003–ம் ஆண்டுக்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சி.ஐ.டி.யு. சம்மேளன துணைத்தலைவர் பாஸ்கரன், பாட்டாளி தொழிற்சங்க பொதுச்செயலாளர் வீரமணி, தொழிலாளர் விடுதலை முன்னணி பொதுச்செயலாளர் கருணாநிதி, மறுமலர்ச்சி தொழிற்சங்க துணை பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன், தேசிய முற்போக்கு சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சி.ஐ.டி.யு. சிறப்பு தலைவர் முத்துக்குமரன் நன்றி கூறினார்.


Next Story