ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஆதரவற்ற குழந்தைகளுடன் ஜெ.தீபா, கேக் வெட்டி கொண்டாட்டம்
மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா மதுரவாயலில் உள்ள ஆதரவற்றோர் பெண் குழந்தைகள் இல்லத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.
பூந்தமல்லி,
இதில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, தனது கணவருடன் கலந்துகொண்டார்.
ஜெ.தீபா, ஆதரவற்ற குழந்தைகளுடன் கேக் வெட்டி, குழந்தைகளுக்கு ஊட்டி விட்டார். அனைவருக்கும் இனிப்பும் வழங்கப்பட்டது. மேலும் ஆதரவற்ற பெண்களுக்கு சேலையும், குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம், பேனா உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கிய ஜெ.தீபா, அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார்.
அதன்பிறகு நிருபர்களிடம் ஜெ.தீபா கூறும்போது, ‘‘எந்த ஒரு சூழலிலும் நான் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்களை ஏற்கமாட்டேன்’’ என்றார்.
Next Story