கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்


கோரிக்கைகளை வலியுறுத்தி  வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 1 March 2017 4:30 AM IST (Updated: 28 Feb 2017 7:20 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டம் முழுவதும் கோரிக்கைகளை வலியுறுத்தி 2,540 வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை,

வேலை நிறுத்தம்

நாடு முழுவதும் வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக கூறியிருந்தனர். அதன்படி நேற்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது, வாரத்தில் 5 நாட்கள் வேலை, ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின்போது கூடுதல் நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் வேலை செய்த ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும், வங்கி பணிகளை தனியாருக்கு தாரைவார்க்கக் கூடாது, வங்கி ஊழியர்களுக்கான சம்பள விகிதத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தனர்.

வங்கி சேவைகள் பாதிப்பு

இதேபோன்று சிவகங்கை மாவட்டத்திலும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியன் வங்கி, ஸ்டேட் வங்கி உள்ளிட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உள்பட மாவட்டத்தில் 220–க்கும் மேற்பட்ட வங்கிகளின் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தின்போது வங்கி ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த போராட்டத்தில் 2,540 வங்கி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

வேலை நிறுத்த போராட்டம் காரணமாக 80 சதவீத வங்கிகள் திறக்கப்படவில்லை. இதனால் நேற்று வங்கி சேவைகள் அனைத்து பாதிக்கப்பட்டன. பண பரிவர்த்தனை செய்யமுடியாமல் வணிகர்கள், பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.


Next Story