இளையான்குடியில் மின் மோட்டார் மூலம் குடிநீர் திருடினால் கடும் நடவடிக்கை பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை


இளையான்குடியில் மின் மோட்டார் மூலம் குடிநீர் திருடினால் கடும் நடவடிக்கை பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 1 March 2017 4:15 AM IST (Updated: 28 Feb 2017 7:21 PM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி பேரூராட்சி பகுதியில் மின் மோட்டார் மூலம் குடிநீர் திருடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

இளையான்குடி,

தண்ணீர் பற்றாக்குறை

இளையான்குடி பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

இளையான்குடி பகுதியில் கடந்த ஆண்டு தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் பருவமழை பொய்ப்பின் காரணமாக நீர்நிலைகள் அனைத்தும் தண்ணீரின்றி உள்ளன. அதேபோல் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துவிட்டது. எனவே தண்ணீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு இளையான்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறது. இதேபோல் பொதுமக்கள் கிடைக்கும் காவிரி கூட்டுக்குடிநீர், செலவு நீர் ஆகியவற்றையும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

கடும் நடவடிக்கை

மேலும் குடிநீர் குழாய்களில் இருந்து மின் மோட்டார் மூலம் குடிநீர் திருடுவது குற்றமாகும். அவ்வாறு குடிநீர் குழாய்களில் மின் மோட்டார் மூலம் குடிநீர் திருடுவது, அதிகாரிகள் ஆய்வின்போது கண்டுபிடிக்கப்பட்டால் வீட்டின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது வீட்டின் குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு ஆகியவை துண்டிக்கப்படுவது மட்டுமின்றி, போலீஸ் நடவடிக்கையும் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story