மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் கலெக்டர் ராஜேஷ் தொடங்கி வைத்தார்


மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் கலெக்டர் ராஜேஷ் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 1 March 2017 4:15 AM IST (Updated: 28 Feb 2017 8:57 PM IST)
t-max-icont-min-icon

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்பட்டு

கடலூர்,

நலத்திட்டங்கள்

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரசின் இலவச நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதை கலெக்டர் ராஜேஷ் தொடங்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்த துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.

மேலும் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்புள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து கலெக்டர் அலுவகத்துக்கு மாற்றுத்தினாளிகள் சிரமமின்றி வந்து செல்ல 3 சக்கர நாற்காலிகளை கலெக்டரின் நேர்முக உதவியாளரிடமும்(பொது), கடலூர் பஸ்நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் பஸ்சில் இருந்து இறங்கி இன்னொரு பஸ்சில் சிரமமின்றி ஏறி செல்வதற்காக 2 சக்கர நாற்காலிகளை பஸ்நிலைய ஆட்டோ சங்க பிரமுகர்களிடமும் கலெக்டர் ராஜேஷ் வழங்கினார்.

ஓரங்க நாடகம்

இதை அடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து சம்பந்தம் கலைக்குழுவினரின் விழிப்புணர்வு கரகாட்டம் மற்றும் ஓரங்கநாடகம் நடைபெற்றது. பின்னர் இது குறித்து கலெக்டர் ராஜேஷ் நிருபர்களிடம் கூறும்போது கலெக்டர் அலுவலகத்திலும், கடலூர் பஸ்நிலையத்திலும் மாற்றத்திறனாளிகள் சிரமம் இன்றி வந்து செல்ல வசதியாக இந்த சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை மாற்றுத்திறனாளிகள் பன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக என்னென்ன நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன என்பதை அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்துள்ளேன் என்றார் அவர்.


Next Story