சிதம்பரத்தில் நகராட்சியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சிதம்பரத்தில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம்,
பாதாள சாக்கடை திட்டம்சிதம்பரத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், 33 வார்டுகளிலும் இந்த திட்டத்துக்காக குழாய் பதிக்கும் போது குடிநீர் மற்றும் குழிவுநீர் குழாய்கள் உடைந்தன. இதை இதுநாள் வரையில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்காததை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ஓய்வூதியர் சங்க வட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். நகர்க்குழு உறுப்பினர்கள் சங்கமேஸ்வரன், சின்னையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதவன், நகர செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட குழு உறுப்பினர் முத்து நன்றி கூறினார்.