பன்றி காய்ச்சலை தடுக்கும் ‘கபசூர’ கசாயம் பசுமை தாயகம் சார்பில் வழங்கப்பட்டது


பன்றி காய்ச்சலை தடுக்கும் ‘கபசூர’ கசாயம் பசுமை தாயகம் சார்பில் வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 1 March 2017 4:49 AM IST (Updated: 1 March 2017 4:49 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பன்றி காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. ஏராளமானோர் பன்றி காய்ச்சல் நோயால் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

தாம்பரம்,

தமிழகத்தில் பன்றி காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. ஏராளமானோர் பன்றி காய்ச்சல் நோயால் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இந்த நிலையில், இந்த பன்றி காய்ச்சல் நோயை கட்டுப்படுத்தும் ‘கபசூர’ என்கிற கசாயத்தை சித்த மருத்துவர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

பன்றி காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கசாயத்தை தொடர்ந்து 6 நாட்கள் காலை, மாலை இரு வேளைகளிலும் குடித்து வந்தால் நோய் கட்டுப்படுத்தப்படும் என சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கசாயத்தை தொடர்ந்து 3 நாட்களுக்கு வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம் எனவும் சித்த மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இந்த கசாயம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பசுமை தாயகம் சார்பில் பல்லாவரத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக கபசூர கசாயம் வழங்கப்பட்டது.

கசாயம் வழங்கும் நிகழ்ச்சியை முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி தொடங்கிவைத்தார். இதில், தமிழ் மருத்துவ கழக தலைவர் வேலாயுதம், முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கபசூர கசாயத்தை பருகினர். 

Next Story