பொதுமக்களிடம் ஆர்வம் குறைந்ததால் வெளிநாட்டு குளிர்பானங்களின் விற்பனை 48 சதவீதம் குறைந்தது
பொதுமக்களிடம் ஆர்வம் குறைந்ததால், வெளிநாட்டு குளிர்பானங்களின் விற்பனை 48 சதவீதம் குறைந்துள்ளது.
சென்னை,

வெளிநாட்டு குளிர்பானங்கள்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னையில் இளைஞர்கள் போராட்டம் நடத்தியபோது, வெளிநாட்டு குளிர்பானங்களை குடிக்காமல் தவிர்த்தனர். மேலும், அந்த குளிர்பானங்களை தரையில் கொட்டி தங்களது எதிர்ப்பையும் தெரிவித்தனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தைப்போல், வெளிநாட்டு குளிர்பானங்கள் எதிர்ப்புக்கும் பொதுமக்களிடம் ஆதரவு பெருகியது.
இதற்கிடையே, வணிகர் சங்கங்களும் மார்ச் 1-ந்தேதி (இன்று) முதல் வெளிநாட்டு குளிர்பானங்களை கடைகளில் விற்பனை செய்ய மாட்டோம் என்று அறிவித்தன. தொடர்ந்து, அன்னிய நாட்டு உணவுப்பொருட்கள் விற்பனையையும் குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளன.
ஆனால், அதற்கு முன்னதாகவே பொதுமக்களும் வெளிநாட்டு குளிர்பானங்கள் மீதான மோகத்தை குறைத்து, அதை வாங்குவதை குறைத்துக் கொண்டுள்ளனர்.
48 சதவீதம் விற்பனை குறைந்தது
இதற்கு முன்பு தமிழகத்தில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பெட்டிகள் வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனையாகும். ஒரு பெட்டியில் 24 பாட்டில்கள் இருக்கும். தற்போது, விற்பனையாகும் பெட்டிகள் 5,500 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. கிட்டத்தட்ட 48 சதவீதம் விற்பனை சரிந்துள்ளது. அதே நேரத்தில், உள்நாட்டு குளிர்பானங்களின் விற்பனை அதிகரித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பி.சொரூபன் கூறியதாவது:-
தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க செயற்குழு கூட்டத்தில், கோக், பெப்சி போன்ற அன்னிய நாட்டு குளிர்பானங்கள் தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் 26-ந்தேதி முதல் விற்பனை செய்யக்கூடாது என அறிவித்தோம். தமிழ்நாட்டில் இப்போது கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு குளிர்பானங்கள் சுமார் 48 சதவீதம் விற்பனை இழப்பை சந்தித்து கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், உள்நாட்டு பானங்கள் விற்பனை சற்று அதிகரித்துள்ளது. வரும் மாதங்களில் அன்னிய நாட்டு குளிர்பானங்கள் விற்பனையை அடியோடு நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விழாக்களிலும், சுபநிகழ்ச்சிகளிலும் அன்னிய நாட்டு குளிர்பானங்கள் உபயோகிக்கக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story