வறட்சியால் கால்நடைகளின் தீவனத்துக்காக விடிய விடிய காத்திருந்து வாழை மட்டை சேகரித்து செல்லும் விவசாயிகள்
புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் கால்நடைகளின் தீவனத்துக்காக விடிய விடிய காத்திருந்து விவசாயிகள் வாழை மட்டைகளை சேகரித்து செல்கிறார்கள்.
புஞ்சைபுளியம்பட்டி,
பருமழை பொய்த்ததால் இந்த தமிழகம் எப்போதும் சந்திக்காத வறட்சியை எதிர்கொண்டுள்ளது. வற்றாத ஜீவநதிகள் காந்து மணல் மேடுகளாகிவிட்டன. ஏரி, குளங்கள் தண்ணீரின்றி விளையாட்டு மைதானங்களாக மாறிவிட்டன. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து பல இடங்களில் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
கால்நடைகளையும் வறட்சி விட்டுவைக்கவில்லை. தோட்டங்களில் தீவனங்கள் வளர்ந்தால்தான் கால்நடைகளின் பசியை போக்க முடியும். ஆனால் தண்ணீரின்றி பயிர்களையே விவசாயிகளால் காப்பாற்ற முடியாத நிலையில் கால்நடைகளின் தீவனங்களை எப்படி பயிர் செய்ய முடியும். இதனால் விவசாயிகள் தென்னை மட்டைகளை வெட்டி கால்நடைகளுக்கு போடுகிறார்கள். மேலும் காய்ந்து கிடக்கும் குளங்களில் படந்திருக்கு பச்சை கொடிகளை அறுத்து கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கிறார்கள். இவ்வாறு பச்சை தீவனங்கள் எந்த வழியில் கிடைத்ததாலும் அதை தீவனமாக பயன்படுத்திவருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்திலும் கடுமையான வறட்சி ஏற்பட்டு உள்ளது. பவானிசாகர் அணை நீர்மட்டம் எப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்துவிட்டது. இதனால் அரக்கன்கோட்டை, தடப்பள்ளி, காலிங்கராயன், கீழ்பவானி வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடமுடியவில்லை. இதனால் வாய்க்கால் பாசனத்தை நம்பியுள்ள லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் காய்ந்து கிடக்கின்றன.
புஞ்சைபுளியம்பட்டியில் ஏராளமான விவசாயிகள் கால்நடைகள் வளர்த்து வருகிறார்கள். சத்தியமங்கலத்தில் இருந்து கேரளாவுக்கு நாள்தோறும் சரக்கு ஆட்டோ, வேன்களில் வாழைக்காய் பாரம் ஏற்றிச்செல்லப்படுகிறது. வாகனங்களில் ஏற்றப்படுதட வாழைக்காய்கள் அடிபடாமல் இருக்க விவசாயிகள் வாழை மட்டைகளை சுற்றுச்செல்வார்கள். கேரளா சென்று வாழைக்காய்களை இறக்கும்போது வாழைமட்டைகளை உறுவி வாகனத்திலேயே போட்டுக்கொண்டு சத்தியமங்கலம் திரும்பி வரும் வழியில் தேசிபாளையம் குளக்கரையில் வாழைமட்டைகளையும், சருகுகளையும்