திண்டுக்கல் நகரில் இந்து மக்கள் கட்சி அலுவலகம் உள்பட ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்


திண்டுக்கல் நகரில் இந்து மக்கள் கட்சி அலுவலகம் உள்பட ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்
x
தினத்தந்தி 1 March 2017 4:15 AM IST (Updated: 1 March 2017 4:51 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் நகரில், போலீஸ் பாதுகாப்புடன் இந்து மக்கள் கட்சி அலுவலகம் உள்பட ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் இருக்கின்றன. குறிப்பாக பஸ் நிலையம், முக்கிய வீதிகள், சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகம் காணப்படுகின்றன. ஆங்காங்கே கட்டிடங்கள், தள்ளு வண்டிகள் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதை பார்க்க முடியும். இந்த ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.

இந்த நிலையில், பாரதிபுரம், சவேரியார்பாளையம் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி கமி‌ஷனர் மனோகர் உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து உதவி நகரமைப்பு அலுவலர் உதயகுமார் தலைமையிலான மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். அவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்தனர்.

இந்து மக்கள் கட்சி அலுவலகம்

பாரதிபுரம் பகுதியில் மொத்தம் 8 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. அங்கு இருந்த இந்து மக்கள் கட்சி அலுவலகமும் அகற்றப்பட்டது. இதே போல, சவேரியார்பாளையம் பகுதியில் ஒரு வீடும் இடிக்கப்பட்டது. பாதுகாப்புக்காக போலீசாரும் மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்றனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘நகர் பகுதி முழுவதும் ஆக்கிரமிப்பு பகுதிகளை ஆய்வு செய்து கண்டுபிடித்து வருகிறோம். அபிராமி அம்மன் சன்னதி தெரு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் இருக்கின்றன. அவற்றை அகற்றுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறோம். அவர்கள் அகற்றாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல நகர் பகுதி முழுவதும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடக்கும்’ என்றனர்.


Next Story