கூடுவாஞ்சேரியில் கத்தியால் மிரட்டி கடை உரிமையாளரிடம் ரூ.2¼ லட்சம் பறிப்பு
கூடுவாஞ்சேரியில் கத்தியால் மிரட்டி கடை உரிமையாளரிடம் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் பறிக்கப்பட்டது.
வண்டலூர்,

கடை உரிமையாளர்
காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி டிபன்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகசாமி (வயது 59). இவர் நெல்லிக்குப்பம் சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆறுமுகசாமி வழக்கம் போல வியாபாரம் முடிந்த பிறகு கடையை பூட்டிக்கொண்டு கடையில் வசூல் ஆன பணம் ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்தை மஞ்சள் பையில் வைத்து சைக்கிளில் மாட்டிக்கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
பணம் பறிப்பு
டிபன்ஸ் காலனி அருகே செல்லும் போது திடீரென 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ஆறுமுகசாமியை வழிமறித்து கத்தியால் மிரட்டி அவர் சைக்கிளில் மாட்டி வைத்திருந்த பணப்பையை பறித்து சென்றனர்.
இது குறித்து ஆறுமுகசாமி கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேர் கொண்ட கும்பலை தேடிவருகின்றனர்.
இந்த சம்பவம் வியாபாரிகளிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story