சசிகலாவுக்கு எதிராக பேட்டி அளித்த போலீஸ்காரர் பணி இடைநீக்கம்


சசிகலாவுக்கு எதிராக பேட்டி அளித்த போலீஸ்காரர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 1 March 2017 4:30 AM IST (Updated: 1 March 2017 5:02 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் போலீஸ்காரர் பணி இடைநீக்கம் சசிகலாவுக்கு எதிராக பேட்டி அளித்தவர்

தேனி,

தேனி மாவட்டம் குச்சனூரை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவர், மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட போது, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். பின்னர், ஜெயலலிதா விடுதலை பெற்றதால் தேனியில் மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினார். கடந்த மாதம், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை, தமிழக முதல்–அமைச்சராக பதவியேற்க கவர்னர் அழைப்பு விடுத்தால் சென்னையில் ஜெயலலிதா சமாதியில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பேட்டி அளித்தார். இதையடுத்து இவர் தேனி ஆயுதப்படை பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில், போலீஸ் துறையில் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதற்காக துறைவாரி நடவடிக்கையாக போலீஸ்காரர் வேல்முருகனை பணி இடைநீக்கம் செய்து, தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டு உள்ளார்.


Next Story