கோவிலுக்கு புதிய கொடிமரம் செய்ய மலேசியாவில் இருந்து 70 அடி உயர வேங்கை மரம் கும்பகோணத்துக்கு கொண்டுவரப்பட்டது


கோவிலுக்கு புதிய கொடிமரம் செய்ய மலேசியாவில் இருந்து 70 அடி உயர வேங்கை மரம் கும்பகோணத்துக்கு கொண்டுவரப்பட்டது
x
தினத்தந்தி 1 March 2017 4:00 AM IST (Updated: 1 March 2017 5:05 AM IST)
t-max-icont-min-icon

சாரங்கபாணி கோவிலுக்கு புதிய கொடிமரம் செய்ய மலேசியாவில் இருந்து 70 அடி உயர வேங்கை மரம் கும்பகோணத்துக்கு கொண்டுவரப்பட்டது

கும்பகோணம்,

108 வைணவத்தலங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து 3-வது தலமாக போற்றப்படுவது கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோவிலாகும். பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலின் கொடி மரம் 100 ஆண்டுகள் பழமையானதால் சிதிலமடைந்து காணப்பட்டது. எனவே புதிய கொடிமரம் நிறுவ இந்து சமய அறநிலையத்துறையினர் முடிவு செய்தனர். அதை நிறுவ உபயதாரர் ஒருவர் முன்வந்தார். அந்த உபயதாரர் மூலம் மலேசியா நாட்டில் இருந்து 70 அடி உயரமும், 2 அடி அகலமும் உள்ள வேங்கை மரம் தூத்துக்குடிக்கு கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து கும்பகோணத்திற்கு லாரி மூலம் வேங்கை மரம் நேற்று கொண்டு வரப்பட்டது. ரூ.25 லட்சம் மதிப்பிலான இந்த வேங்கை மரத்தை கொடிமரமாக சீர் செய்து வருகிற சித்திரை திருவிழாவிற்குள் நிர்மாணிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முன்னதாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட வேங்கை மரத்துக்கு கோவிலின் சக்கரபாணி பட்டாச்சாரியார் தலைமையில் பட்டாச்சாரியார்கள் சிறப்பு அர்ச்சனை செய்தனர். இதில் கோவில் செயல் அலுவலர் ஆசைத்தம்பி மற்றும் பணியாளர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

Next Story