தஞ்சை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் பணம்-காசோலை பரிவர்த்தனை பாதிப்பு
தஞ்சை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பணம்-காசோலை பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
தஞ்சாவூர்,
வேலை நிறுத்தம்
வங்கி பணிகளை தனியாருக்கு கொடுப்பதை மத்தியஅரசு கைவிட வேண்டும். பணமதிப்பு நீக்கல் நடவடிக்கைக்கான வேலை பளுவிற்கு நியாயமான தொகை வழங்க வேண்டும். பொதுத்துறை வங்கி வாரியங்களில் ஊழியர்கள், அதிகாரிகளை இயக்குனர்களாக நியமிக்க வேண்டும். 11-வது இருதரப்பு ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டும். வங்கி பணியின்போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வாரத்துக்கு 5 நாட்கள் வங்கி பணி என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வராக்கடனை வசூல் செய்ய கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேண்டுமென்றே வங்கிக்கடனை திரும்ப செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ரிசர்வ் வங்கி மற்றும் மத்தியஅரசுக்கு இணையான ஓய்வூதியத்திட்டத்தை வங்கித்துறையிலும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தினால் தஞ்சை மாவட்டத்தில் 33 வங்கிகளை சேர்ந்த 200 கிளைகள் மூடப்பட்டிருந்தன. அதிகாரிகள், ஊழியர்கள் என 1,700 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால் வங்கிகளில் பணம் டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல், காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. நேற்று மாதத்தின் கடைசி நாள் என்பதால் சம்பள பணத்தை எடுக்க முடியாமல் பல நிறுவன ஊழியர்கள் தடுமாறினர். அவசர பணத்தேவை உள்ளவர்கள் ஏ.டி.எம். மூலம் பணம் எடுத்து சென்றனர்.
நகர கூட்டுறவு வங்கிகள்
தஞ்சை, கும்பகோணத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகள் வழக்கம்போல் செயல்பட்டன. ஆனால் மிக குறைந்த எண்ணிக்கையில் தான் ஊழியர்கள் வேலைக்கு வந்திருந்தனர். மாவட்டத்தில் 13 நகர கூட்டுறவு வங்கிகள் உள்ளன. இவற்றில் கும்பகோணம் நகர கூட்டுறவு வங்கி வழக்கம்போல் செயல்பட்டது. ஆனால் மீதமுள்ள 12 நகர கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் தஞ்சை, பாபநாசம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள 12 நகர கூட்டுறவு வங்கிகள் மூடப்பட்டு இருந்தன.
வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற அதிகாரிகள், ஊழியர்கள் தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனை சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், அகில இந்திய வங்கி ஊழியர் சங்க இணைச் செயலாளர் சீனிவாசன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த மோகனசுந்தரம், வீரமணி, ஸ்டேட் வங்கி ஊழியர் சங்கத்தை சேர்ந்த நந்தகுமார் ஆகியோர் பேசினர்.
இதில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு, இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு ஆகியவை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

Next Story