கணவன் கண் எதிரே நடந்த துணிகர சம்பவம் பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
தஞ்சை அருகே கணவன் கண் எதிரே பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர்,
7 பவுன் சங்கிலி பறிப்பு
தஞ்சை அருகே புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கோபால்சாமி. விவசாயி. இவருடைய மனைவி இலக்கியா (வயது 26). சம்பவத்தன்று கோபால்சாமியும், இலக்கியாவும் வீட்டை பூட்டிவிட்டு தஞ்சை கடைவீதிக்கு மொபட்டில் வந்தனர். பின்னர் பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினர். இந்தநிலையில், வீட்டின் கதவை திறந்த கோபால்சாமி மொபட்டை உள்ளே கொண்டுசென்றார். அப்போது அங்கு மறைந்துநின்ற மர்ம நபர் இலக்கியாவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். இதில் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன் திருடன் என கூச்சலிட்டார். உடனே கோபால்சாமி மர்ம நபரை விரட்டிச்சென்றார். அதற்குள் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிஓடிய நபர் அங்கு மோட்டார் சைக்கிளில் தயாராக நின்றுகொண்டிருந்த மற்றொரு நபருடன் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றுவிட்டார். இதுகுறித்து கோபால்சாமி, தஞ்சை தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணிடம் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடிவருகின்றனர்.

Next Story