ராணுவ தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே கண்டனம்


ராணுவ தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே கண்டனம்
x
தினத்தந்தி 1 March 2017 5:06 AM IST (Updated: 1 March 2017 5:05 AM IST)
t-max-icont-min-icon

ராணுவ தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.

மும்பை,

ராணுவ தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராணுவ தேர்வு

ராணுவத்தில் சேர்வதற்கான எழுத்து தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நாடு முழுவதும் 52 மையங்களில் நடந்தது. முன்னதாக, இந்த வினாத்தாள் மராட்டியம் மற்றும் கோவாவில் வெளியாகி விட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 18 பேரை கைது செய்தனர். 350 மாணவர்கள் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

ராணுவ தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார். மும்பை பாந்திராவில் மராத்தி இலக்கியவாதி வி.வி.சிர்வாத்கரின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற விழாவின் போது, தன்னுடைய கண்டனத்தை உத்தவ் தாக்கரே பதிவு செய்தார். அவர் கூறியதாவது:–

நாட்டை எப்படி பாதுகாப்பீர்கள்?

எந்த சூழலிலும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதால், பிரதமர் மோடியும், உத்தவ் தாக்கரேயும் அதற்கான ஆதரவு திரட்டுவதிலேயே மும்முரமாக இருக்கிறார்கள். நாட்டில் நடப்பதை சற்று பாருங்கள். ராணுவ தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி இருக்கிறது. வினாத்தாளையே பத்திரப்படுத்த தெரியாதவர்கள், நாட்டின் பாதுகாப்பை எப்படி உறுதிசெய்வார்கள்?.

இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.

மேலும், மும்பை மேயர் பங்களாவில் பால் தாக்கரே நினைவகம் அமைக்க மாநகராட்சி ஒப்புதல் அளித்திருப்பதால், மராட்டியத்துக்கே பெருமை ஏற்பட்டிருப்பதாக அப்போது உத்தவ் தாக்கரே குறிப்பிட்டார்.

‘சாம்னா’ வலியுறுத்தல்

அத்துடன், ராணுவ தேர்வு வினாத்தாள் பிரச்சினை மோடி அரசின் பெயரை குலைத்துவிட்டதாகவும், இதற்கு பாரதீய ஜனதா பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் நேற்று சிவசேனா கட்சி பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.


Next Story