நாகையில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்


நாகையில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 1 March 2017 4:30 AM IST (Updated: 1 March 2017 5:06 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் நேற்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நிரந்தர வேலைவாய்ப்பு

வாராக்கடன்களுக்கு வங்கி உயர் அதிகாரிகள் பொறுப்பு ஏற்கவேண்டும், வங்கித்துறையில் மத்திய அரசு சீர்திருத்தங்களை கைவிடவேண்டும், நிரந்தர வேலைவாய்ப்புகளை அயலக சேவைக்கு விடுவதை (அவுட்சோர்சிங்) அனுமதிக்க கூடாது, காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும், பணமதிப்பு நீக்க நடவடிக்கை காலத்தில் கூடுதல் நேரம் பணியாற்றிய ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், வங்கி ஊழியர்களுக்கான அடுத்த கட்ட சம்பள விகிதத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தினர் வற்புறுத்தி வருகின்றனர். இதுதொடர்பான பேச்சுவார்த்தை தலைமை தொழிலாளர் நல ஆணையர் ஏ.கே. நாயக் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இந்த கோரிக்கைகளை வங்கிகளின் நிர்வாக அமைப்பான இந்திய வங்கிகள் சங்கம் ஏற்கவில்லை. அதை தொடர்ந்து வங்கி ஊழியர் சங்கத்தினர் 28-ந்தேதி (அதாவது நேற்று) வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.

வேலை நிறுத்தம்

அதன்படி நேற்று நாகை, நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆதலால் நேற்று நாகையில் உள்ள அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் பூட்டப்பட்டு இருந்தன. இதனால் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

Next Story