நாகையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடந்தது


நாகையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 1 March 2017 4:15 AM IST (Updated: 1 March 2017 5:06 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடந்தது

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பழனிசாமி தலைமை தாங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் வங்கிகடன் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 11 மனுக்களும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 205 மனுக்களும் என மொத்தம் 216 மனுக்கள் பெறப்பட்டன. அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஒருவார காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உரிய முடிவினை மனுதாரர்களுக்கு அறிவிக்குமாறு கலெக்டர் பழனிசாமி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 14 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் எந்திரங்களை கலெக்டர் பழனிசாமி வழங்கினார்.

இக்கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) தேன்மொழி, மாவட்ட ஆதிதிராவிடர் நல துறை அலுவலர் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Next Story