கரூரில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் ரூ.50 கோடி பரிவர்த்தனை பாதிப்பு
கரூரில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் ரூ.50 கோடி பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
கரூர்,
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி நேற்று கரூரில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பாரத ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடத் தினர்.ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க அமைப்பாளர் நரசிம்மன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்கள் சங்க பொறுப்பாளர் கணேசன் கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு மக்கள் விரோத வங்கித்துறை சீர்திருத்தங்களை அமல்படுத்த கூடாது. நிரந்தர பணிகளை வெளியாட்களுக்கு கொடுக்க கூடாது. ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். கருணை அடிப்படையில் வங்கிகளில் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். கோடிக்கணக்கான ரூபாய் வாராக்கடன்களை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் காப்பீட்டு கழக ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு. சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.
வேலை நிறுத்த போராட்டத்தால் கரூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் பணிபுரியும் 1,200 பணியாளர்கள் நேற்று பணிக்கு செல்லவில்லை. இதனால் வங்கிகள் மூடப்பட்டிருந்தன. கரூர் தொழில் நகரம் என்பதால் மொத்தம் ரூ.50 கோடிக்கு பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

Next Story