திருவெண்காட்டில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம்
திருவெண்காட்டில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் பாரதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
திருவெண்காடு,
திருவெண்காட்டில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜகுமாரி பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க தலைவர் ஜெயராஜமாணிக்கம், முன்னாள் கவுன்சிலர் ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி அரசு மருத்துவமனை மருந்தாளுனர் முரளி வரவேற்றார். இதில் பாரதி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்து பேசினார். முகாமில் குழந்தை மற்றும் பெண்களுக்கான மருத்துவம், கண், மூக்கு, தொண்டை உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

Next Story