தங்கள் மீதான ஊழல் புகார்களை மறைக்க காங்கிரஸ் கட்சியினர் பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள் ஷோபா எம்.பி. குற்றச்சாட்டு
தங்கள் மீதான ஊழல் புகார்களை மறைக்க காங்கிரஸ் கட்சியினர் பொய் பிரசாரம் செய்து வருவதாக ஷோபா எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
ஹாசன்,
தங்கள் மீதான ஊழல் புகார்களை மறைக்க காங்கிரஸ் கட்சியினர் பொய் பிரசாரம் செய்து வருவதாக ஷோபா எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
ஷோபா எம்.பி. பேட்டிபா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடு தாலுகாவில் வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு பா.ஜனதா கட்சி சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிக்கமகளூரு–உடுப்பி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ஷோபா கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்தபின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
முதல்–மந்திரி சித்தராமையா தனது பதவியை காப்பாற்றி கொள்ள கட்சியின் மேலிடத்திற்கு ரூ.1000 கோடி பணம் கொடுத்ததாக எடியூரப்பா கூறினார். அவர் லஞ்சம் கொடுத்ததற்கான ஆதாரம், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோவிந்தராஜ் எம்.எல்.சி. வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது பறிமுதல் செய்த குறிப்பேட்டில்(டைரி) உள்ளதாகவும் அவர் கூறி இருந்தார்.
பொய் பிரசாரம்அவர் கூறியது போல சித்தராமையா மற்றும் மந்திரிகள் காங்கிரஸ் மேலிட தலைவர்களுக்கு பணம் கொடுத்ததற்கான தகவல் இடம் பெற்ற குறிப்பேடு தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளது.
இதற்கு பழிவாங்கும் நோக்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில தலைவர்கள் ஒரு குறிப்பேட்டை வெளியிட்டு உள்ளனர். அது எடியூரப்பாவின் நெருங்கிய ஆதரவாளரான லெகர்சிங் எம்.எல்.சி. வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்திய போது பறிமுதல் செய்யப்பட்ட குறிப்பேடு என்றும், அதில் பா.ஜனதா மேலிட தலைவர்களுக்கு மாநிலத்தில் உள்ள பா.ஜனதா தலைவர்கள் பணம் கொடுத்த விவரம் உள்ளதாகவும் கூறிவருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. தங்கள் மீதான ஊழல் புகார்களை மறைக்க காங்கிரஸ் கட்சியினர் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.
மக்களை திசை திருப்ப...தன்னுடைய வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் அதிகாரிகள் யாரும் அப்படி ஒரு குறிப்பேட்டை பறிமுதல் செய்யவில்லை என லெகர்சிங் எம்.எல்.சி அறிக்கை விடுத்துள்ளார். மேலும் தன்னைப்பற்றி சிலர் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ‘சைபர் கிரைம்‘ போலீசில் புகார் அளிக்க போவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டை மறைக்க இப்படி தரக்குறைவான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
பா.ஜனதா கட்சியை பற்றியும், அதில் உள்ள தலைவர்களை பற்றியும் மக்களுக்கு நன்றாக தெரியும். எனவே சித்தராமையா தலைமையிலான மாநில அரசு, பா.ஜனதா கட்சியை பற்றி பொய்யான தகவலை வெளியிட்டு மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்.
ஆதாரத்தை வெளியிடலாம் மேலும்பா.ஜனதா மேலிடத் தலைவர்களுக்கு எங்கள் கட்சியை சேர்ந்த தலைவர்கள் காசோலை மூலம் பணம் கொடுத்து உள்ளதாக ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி குற்றம்சாட்டி வருகிறார். அதற்கான ஆதாரம் குமாரசாமியிடம் இருந்தால் அதை அவர் தாராளமாக வெளியிடலாம். அதைவிட்டு விட்டு பொய்யான தகவல்களை மக்களிடம் பரப்புவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஷோபா எம்.பி. கூறினார்.