பெங்களூரு மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ்–பா.ஜனதா கவுன்சிலர்கள் இடையே தள்ளுமுள்ளு–பரபரப்பு
பெங்களூரு மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கவுன்சிலர்கள் இடையே தள்ளுமுள்ளு உண்டானது. இதனால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு,
பெங்களூரு மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கவுன்சிலர்கள் இடையே தள்ளுமுள்ளு உண்டானது. இதனால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது.
பட்டா வழங்குவது இல்லைபெங்களூரு மாநகராட்சி மன்ற கூட்டம், மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள மன்ற கூட்ட அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டி பேசியதாவது:–
சந்திரா லே–அவுட், கோவிந்தராஜ்நகர் பகுதிகளில் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்குகிறார்கள். வருவாய் நிலத்தில் உள்ள ஏழை மக்களின் வீட்டு மனைகளுக்கு அதிகாரிகள் பட்டா வழங்குவது இல்லை. அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் மாநகராட்சிக்கு வருவாய் குறைந்துள்ளது.
ரூ.50 லட்சம் வருவாய்இந்த பட்டா வழங்குவதில் மாநகராட்சிக்கு ரூ.50 லட்சம் வருவாய் கிடைத்து இருக்க வேண்டும். ஆனால் அதிகாரிகளின் தவறான நடவடிக்கையால் இதுவரை ஒரு ரூபாய் கூட வருவாய் வரவில்லை. ‘அக்ரம–சக்ரம‘ திட்டம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. வருவாய் நிலத்தில் உள்ள வீட்டு மனைகளில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வீடு கட்ட முடியாமல் தவிக்கிறார்கள். வங்கிகளிடம் இருந்து கடனும் பெற முடியவில்லை.
1998–ம் ஆண்டு கே.பி.பாண்டே கமிஷனராக இருந்தபோது இத்தகைய நிலை வந்தது. அப்போது நான் நிதி நிலைக்குழு தலைவராக பணியாற்றினேன். அனைத்து கவுன்சிலர்களும் சேர்ந்து மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பினோம். அரசு இதை ஏற்றது. 1998–ம் ஆண்டு முதல் 2007–ம் ஆண்டு வரை வருவாய் உள்ள நிலத்தில் இருந்த வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கப்பட்டது.
வீட்டுமனைகளுககு பட்டாஅதன் பிறகு பட்டா வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இப்போது 198 கவுன்சிலர்களும் ஒன்று சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைப்போம். வருவாய் நிலங்களில் உள்ள வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்க அனுமதிக்குமாறு கோருவோம்.
அடுக்குமாடி கட்டிடங்களை தவிர ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு பத்மநாபரெட்டி பேசினார்.
கூச்சல்–குழப்பம்அதைத்தொடர்ந்து சபையில் எடியூரப்பா குறித்து காங்கிரஸ் கவுன்சிலர்கள் சிலர் கடுமையாக விமர்சனம் செய்ததாக கூறி பா.ஜனதா கவுன்சிலர்கள் எழுந்து முழக்கமிட்டனர். பதிலுக்கு காங்கிரஸ் கவுன்சிலர்களும் கோஷங்களை எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல்–குழப்பம் உண்டானது. ஒரு கட்டத்தில் இரு கட்சிகளின் கவுன்சிலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது கவுன்சிலர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு டாக்டர்கள் விரைந்து வந்து சிகிச்சை அளித்தனர். இதனால் சபையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.