பிளஸ்–2 பொதுத் தேர்வு நாளை தொடக்கம் தூத்துக்குடி மாவட்டத்தில் 21,519 மாணவ–மாணவிகள் எழுதுகின்றனர்
நாளை(வியாழக்கிழமை) தொடங்கவுள்ள பிளஸ்–2 பொதுத் தேர்வை, தூத்துக்குடி மாவட்டத்தில் 21,519 மாணவ, மாணவிகள் பங்கேற்று எழுத உள்ளனர். இத்தேர்வு கண்காணிப்பு பணிக்கு 1,150 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தூத்துக்குடி,
ஆலோசனை கூட்டம்
பிளஸ்–2 தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில், இத்தேர்வு பணியில் ஈடுபடவுள்ள கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
பிளஸ்–2 தேர்வு மையங்கள்
கூட்டத்தில் கலெக்டர் ரவிகுமார் பேசும் போது, ‘மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. அதே போன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் வருகிற 8–ந் தேதி தொடங்குகிறது. மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வை 181 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 21 ஆயிரத்து 519 மாணவ–மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக 65 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதே போன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 294 பள்ளிக்கூடங்களில் படிக்கும் 25 ஆயிரத்து 418 மாணவ–மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக 86 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
பிளஸ்–2 தேர்வு கண்காணிப்பு பணியில் 1,150 ஆசிரியர்களும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கண்காணிப்பு பணியில் 1,500 ஆசிரியர்களும் பணியாற்ற உள்ளனர்.
குலுக்கல் முறையில்...
தேர்வு மையங்களுக்கு ,முதன்மை கண்காணிப்பாளர்களாக பிற பள்ளிக்கூடங்களின் தலைமை ஆசிரியர்கள் பணியாற்ற உள்ளனர். அரசு பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் ஒருவர் மற்றும் மூத்த ஆசிரியர் ஒருவர் வினாத்தாள் கட்டுக் காப்பாளர்களாக செயல்படுவார்கள். முதுகலை ஆசிரியர்கள் பணி மூப்பின் அடிப்படையில் துறை தலைவர்கள் மற்றும் பறக்கும் படை உறுப்பினர்களாக பணியாற்ற உள்ளனர். தேர்வு மையங்களுக்கான அறை கண்காணிப்பாளர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையிலான குழுக்கள் அமைத்து குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவார்கள். தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் எந்தவித தவறும் நடக்காத வகையில் கவனமுடன் செயல்பட வேண்டும்.
தடையில்லா மின்சாரம்
இது தவிர, தாசில்தார்கள் தலைமையில் 8 குழுக்களும், உதவி கலெக்டர்கள் தலைமையில் கோட்ட அளவில் 3 குழுக்களும் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். தேர்வு அறையில் தடையில்லா மின்சாரம், குடிநீர் வசதி, நல்ல வெளிச்சம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நெருக்கடி இல்லாமல் மாணவ–மாணவிகள் தேர்வு எழுதுவதற்கான சூழல் இருக்க வேண்டும். தேர்வு மையத்தின் அருகே விழாக்கள், ஊர்வலங்கள் போன்றவற்றுக்கு அனுமதி அளிக்க கூடாது என்று போலீசுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் செந்தூர்கனி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சங்கரய்யா மற்றும் தேர்வு கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story