கோவில்பட்டியில் 2–வது குடிநீர் திட்ட பணிகள் ஏப்ரல் மாதத்தில் நிறைவு பெறும்
கோவில்பட்டியில் 2–வது குடிநீர் திட்ட பணிகள் வருகிற ஏப்ரல் மாத இறுதிக்குள் நிறைவு பெறும் என்று செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
கோவில்பட்டி,
ஆய்வு கூட்டம்
கோவில்பட்டி 2–வது குடிநீர் திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், கோவில்பட்டி நகரசபை அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் டாக்டர் கண்ணபிரான், நகரசபை நிர்வாகங்களின் மண்டல துணை இயக்குனர் நாராயண நாயர், கோவில்பட்டி நகரசபை ஆணையாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குடிநீர் வடிகால்வாரிய நிர்வாக என்ஜினீயர்கள் எட்வர்டு அமல்ராஜ், சுப்பிரமணியன், சங்கரன், உதவி நிர்வாக என்ஜினீயர்கள் செந்தூர் பாண்டியன், லட்சுமணன், ககாரின், விஜயபாஸ், உதவி என்ஜினீயர்கள் சித்துரெட்டி, ஹசினா, துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், கிழக்கு இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ், தாசில்தார் செல்வ பிரசாத், யூனியன் ஆணையாளர்கள் மோகன், தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:–
கூடுதலாக குடிநீர்...
சீவலப்பேரியில் இருந்து கோவில்பட்டிக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட குழாய்களின் மூலம் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இதையடுத்து, கடந்த 2014–ம் ஆண்டு அப்போதைய முதல்– அமைச்சர் ஜெயலலிதாவால் ரூ.81 கோடியே 82 லட்சம் செலவில் கோவில்பட்டியில் 2–வது குடிநீர் திட்ட பணி தொடங்கி வைக்கப்பட்டது.
முதலில் டெண்டர் எடுத்த நிறுவனம், பணிகளை சரியாக செய்யாததால், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. பின்னர், கடந்த 2016–ம் ஆண்டு மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டு வேகமாக நடைபெற்று வருகிறது. 2–வது குடிநீர் திட்டத்துக்காக சீவலப்பேரியில் அமைக்கப்பட்ட 2 உறைகிணறுகளில் இருந்தும், தற்போது கோவில்பட்டிக்கு கூடுதலாக தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. மேலும் அங்கு 2 உறைகிணறுகள் அமைக்கப்படுகிறது.
கூட்டு குடிநீர் திட்டம்
கோவில்பட்டியில், கடந்த மாதம் தினமும் 50 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது, தினமும் 70 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் 7 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. வருகிற ஏப்ரல் மாத இறுதிக்குள் 2–வது குடிநீர் திட்ட பணிகளை விரைந்து நிறைவேற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியில், ரூ.282 கோடி செலவில் 4–வது குடிநீர் திட்ட பணி நிறைவேற்றப்பட்டு, முன்னாள் முதல்– அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் வெள்ளோட்டம் விடப்பட்டது. அதேபோன்று கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், புதூர் ஆகிய 5 யூனியன்களில் உள்ள 248 பஞ்சாயத்துகளுக்கு குடிநீர் வழங்கும் வகையில், ரூ.96 கோடி செலவில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பணிகள் வருகிற மே மாத இறுதிக்குள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.
பஸ் நிலையம் திறப்பு
கோவில்பட்டி நகரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், ரூ.15 லட்சம் செலவில் 6 இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்படும். வீரவாஞ்சி நகரில் ரூ.10 லட்சம் செலவில் ஆழ்குழாய் கிணறு, தண்ணீர் தொட்டி அமைக்கப்படும். கோவில்பட்டியில், ரூ.5 கோடி செலவில் அண்ணா பஸ் நிலையம் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இந்த பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதி, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வருகிற 3–ந்தேதி (வெள்ளிக்கிழமை) திறக்கப்படும். அங்கு பஸ்கள் வந்து செல்லும். இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
அமைச்சர் ஆய்வு
பின்னர் அவர் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தை பார்வையிட்டார். தொடர்ந்து கிருஷ்ணா நகர் அரசு ஊழியர் குடியிருப்பு அருகில் வீட்டுவசதி வாரியம் சார்பில் கட்டப்படும் குடியிருப்புகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.
நகர செயலாளர் விஜய பாண்டியன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ராமர், கூட்டுறவு நிலவள வங்கி தலைவர் கணபதி பாண்டியன், கூட்டுறவு வங்கி தலைவர் அன்புராஜ், நிர்வாகிகள் வேலுமணி, பழனிகுமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story