திருச்செந்தூரில் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

திருச்செந்தூர்,
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் 64–வது பிறந்த நாளை முன்னிட்டு, திருச்செந்தூர் ஒன்றிய தி.மு.க. சார்பில், திருச்செந்தூர் வ.உ.சி. திடலில் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் நேற்று மதியம் வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் மந்திரமூர்த்தி வரவேற்று பேசினார். அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. அன்னதானத்தை வழங்கி தொடங்கி வைத்தார். நகர செயலாளர் ராமஜெயம், ராஜசேகர், ஆறுமுகநேரி முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் கல்யாணசுந்தரம், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ராஜமோகன், மீனவர் அணி துணை அமைப்பாளர் ஆனந்த் ரொட்ரிகோ, வக்கீல் சாத்ராக், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் சதீஷ்குமார், ஜனகர், தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story