தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் பல கோடி ரூபாய் பண பரிவர்த்தனை பாதிப்பு
தூத்துக்குடியில், வங்கி ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒட்டமொத்தமாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பல கோடி ரூபாய் பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி,
வேலைநிறுத்தம்
நாடு முழுவதும் வங்கி பணிகளை தனியாருக்கு வழங்க கூடாது, வங்கிகளுக்கு நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும், வராக்கடன் வசூலை விரைவுபடுத்த வேண்டும், அரசு ஊழியர்கள் போன்று வங்கி ஊழியர்கள் ஓய்வு பெறும் போது வழங்கப்படும் ஓய்வூதிய பலன்களுக்கு முழுமையான வரிவிலக்கு அளிக்க வேண்டும், பணமதிப்பு நீக்க காலத்தில் கூடுதலாக பணியாற்றியவர்களின் பணி நேரத்துக்கு ஏற்ப கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் நேற்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பண பரிவர்த்தனை பாதிப்பு
இதனால், மாவட்டத்தில் உள்ள 246 வங்கி கிளைகளில் பணியாற்றி வரும் சுமார் 1,350 ஊழியர்கள் ஒட்டமொத்தமாக பணிக்கு செல்லவில்லை. பெரும்பாலான வங்கிகள் பணியாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தன. இதனால் பல கோடி ரூபாய் பணம் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. அதே நேரத்தில் தனியார் வங்கிகள் நேற்று வழக்கம் போல் செயல்பட்டன.

Next Story