ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானபிரசுனாம்பிகை கேடிகம் வாகனங்களில் ஊர்வலம்
மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 11–வது நாளான நேற்று கேடிகம் வாகனங்களில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானபிரசுனாம்பிகை தாயாரும் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தி,
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 11–வது நாளான நேற்று கேடிகம் வாகனங்களில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானபிரசுனாம்பிகை தாயாரும் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
கேடிகம் வாகன வீதிஉலாஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 11–வது நாளான நேற்று காலை 10 மணியளவில் கேடிகம் வாகனங்களில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானபிரசுனாம்பிகை தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியளவில் கொடியிறக்க நிகழ்ச்சி நடந்தது. பின்னர் இரவு 9 மணியளவில் சிம்ம வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், காமதேனு வாகனத்தில் ஞானபிரசுனாம்பிகை தாயாரும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
சாமி ஊர்வலத்தில் கோவில் நிர்வாக அதிகாரி பிரம்மராம்பா, அறங்காவலர் குழு தலைவர் குருவய்யநாயுடு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பல்லக்கு வாகன வீதிஉலாமகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 12–வது நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணியில் இருந்து 11.30 மணிவரை பல்லக்கு வாகனங்களில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானபிரசுனாம்பிகை தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.
நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணியளவில் கோவில் வளாகத்தில் பல்லக்கு சேவையும், இரவு 10 மணியளவில் ஏகாந்த சேவையும் நடக்கிறது.