ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்கள் 6–ந் தேதி முதல் விற்பனை கலெக்டர் ரவிகுமார் தகவல்


ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்கள் 6–ந் தேதி முதல் விற்பனை கலெக்டர் ரவிகுமார் தகவல்
x
தினத்தந்தி 2 March 2017 1:00 AM IST (Updated: 2 March 2017 12:04 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்கள் வருகிற 6–ந் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளதாக, மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்கள் வருகிற 6–ந் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளதாக, மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

ஆசிரியர் தகுதி தேர்வு

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2, அடுத்த மாதம்(ஏப்ரல்) 29, 30–ந் தேதிகளில் நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் வருகிற 6–ந் தேதி முதல் 22–ந் தேதி வரை(ஞாயிற்று கிழமை தவிர) காலை 9 மணி முதல் 5 மணி வரை விற்பனை செய்யப்பட உள்ளன.

விண்ணங்கள் விற்பனை செய்யும் இடங்கள்

இந்த விண்ணப்பங்கள், தூத்துக்குடியில் கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடம், திரேஸ்புரம் சிறுமலர் உயர்நிலை பள்ளிக்கூடம், ஸ்டார் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடம், ஏ.பி.சி. மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடம், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடம், கருங்குளம் அரசு மேல்நிலை பள்ளிக்கூடம், வல்லநாடு சாரா மெட்ரிக் உயர்நிலை பள்ளிக்கூடம், ஸ்ரீவைகுண்டம் டி.வி.ஆர்.கே. மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடம், முக்காணி அரசு மேல்நிலை பள்ளிக்கூடம், ஏரல் அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடம், ஸ்ரீவைகுண்டம் புனித ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடம், ஆத்தூர் சண்முகசுந்தரநாடார் மேல்நிலை பள்ளிக்கூடம், நாசரேத் சாலமன் உயர்நிலை பள்ளிக்கூடம், திருச்செந்தூர் செந்தில்குமரன் மெட்ரிக் உயர்நிலை பள்ளிக்கூடம்,

ஆறுமுகநேரி அன்னம்மாள் மெட்ரிக் உயர்நிலை பள்ளிக்கூடம், திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம் ஜான் தி பிரிட்டோ மெட்ரிக் பள்ளிக்கூடம், உடன்குடி சல்மா மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடம், பரமன்குறிச்சி அபர்ணா மெட்ரிக் உயர்நிலை பள்ளிக்கூடம், கொம்மடிக்கோட்டை எஸ்.எஸ்.என்.அரசு மேல்நிலை பள்ளிக்கூடம், சாத்தான்குளம் திருஇருதய மேல்நிலை பள்ளிக்கூடம், கோவில்பட்டி சி.கே.டி. மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடம், டான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, கயத்தார் பாபா மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடம், கழுகுமலை ஆர்.சி. சூசை மேல்நிலை பள்ளிக்கூடம், குறுக்குச்சாலை அரசு மேல்நிலை பள்ளிக்கூடம், தருவைகுளம் அரசு மேல்நிலை பள்ளிக்கூடம், ஓட்டப்பிடாரம் டி.எம்.பி.மெக்காவாய் மேல்நிலை பள்ளிக்கூடம், விளாத்திகுளம் கவியரசர் அண்ணாமலை ரெட்டியார் மேல்நிலை பள்ளிக்கூடம், புதூர் இந்து நாடார் மேல்நிலை பள்ளிக்கூடம், நாகலாபுரம் எஸ்.கே.கே.இந்து உயர்நிலை பள்ளிக்கூடம் ஆகிய 31 மையங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த மையங்களில் ரூ.50 செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். ஒரு நபருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும். தாள் 1 மற்றும் தாள் 2 ஆகிய இரு தேர்வுகளையும் எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் தனித்தனியான விண்ணப்பங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை...

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற 6–ந் தேதி முதல் 23–ந் தேதி வரை தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் வாங்கிய மாவட்டத்திலேயே பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒரு மாவட்டத்தில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மற்றொரு மாவட்டத்திலும் சமர்ப்பிக்கலாம், என அவர் தெரிவித்துள்ளார்.


Next Story