மீன்பிடி படகுகளில் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றால் கடும் நடவடிக்கை கலெக்டர் ரவிகுமார் எச்சரிக்கை


மீன்பிடி படகுகளில் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றால் கடும் நடவடிக்கை கலெக்டர் ரவிகுமார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 2 March 2017 1:30 AM IST (Updated: 2 March 2017 12:07 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில், மீன்பிடி படகுகளில் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ரவிகுமார் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில், மீன்பிடி படகுகளில் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ரவிகுமார் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது;–

மீன்பிடி படகுகள்

மாவட்டத்தில் மீன்பிடி படகுகளான விசைப்படகு, நாட்டுப்படகு, கட்டுமரம் உள்ளிட்ட அனைத்து படகுகளும் மீன்பிடித் தொழிலுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இந்த படகுகளை மீன்பிடித் தொழில் தவிர்த்து, சுற்றுலா பயணிகளை படகில் ஏற்றிச் செல்லுதல், சொந்த போக்குவரத்துக்கு பயன்படுத்துதல், ஊர்த் திருவிழா மற்றும் பண்டிகை தினங்களில் குடும்பத்தினர், நண்பர்களை படகில் ஏற்றிச் செல்லுதல் மற்றும் சட்ட விதிகளுக்கு முரண்பாடான செயல்களுக்கு படகை பயன்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது ஆகும்.

அதனை மீறி மீன்பிடி தொழில் தவிர்த்து, பாதகமான செயல்களில் ஈடுபடும் படகை ஓட்டுபவர் மற்றும் படகின் உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், இது போன்ற செயல்களில் ஈடுபடுவது தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் மற்றும் விதிகள் 1983–க்கு எதிரான கடுமையான குற்றமாகும்.

படகு பறிமுதல்

எனவே, சம்பந்தப்பட்ட மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்படும். அரசு சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். சம்பந்தப்பட்ட மீனவர்கள் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே மீன்பிடி படகுகளை மீன்பிடித் தொழிலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், என அவர் தெரிவித்துள்ளார்.


Next Story