கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கலெக்டர் கருணாகரன் தொடங்கி வைத்தார்


கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கலெக்டர் கருணாகரன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 2 March 2017 12:34 AM IST (Updated: 2 March 2017 12:34 AM IST)
t-max-icont-min-icon

கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் கருணாகரன் தொடங்கி வைத்தார்.

சேரன்மாதேவி,

கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் கருணாகரன் தொடங்கி வைத்தார்.

கோமாரி நோய் தடுப்பூசி

நெல்லையை அடுத்த மேலச்செவல் அருகே உள்ள வானியன்குளம் கிராமத்தில் கால்நடைகளை தாக்கும் கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கருணாகரன் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார்.

கால்நடைகளை தாக்கும் கோமாரி நோயை தடுப்பதற்கான தடுப்பூசி முகாமில் போடப்பட்டது.

21-ந் தேதி வரை...

கலெக்டர் கருணாகரன் கூறுகையில், “நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வருகிற 21-ந் தேதி வரை முகாம் நடக்கிறது. இதற்காக 83 கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் இப்பணியை மேற்கொள்கின்றனர்.

கால்நடை வளர்ப்போர் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் தங்களுடைய கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்றார்.

முகாமில் கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன், உதவி இயக்குனர்கள் மாரிமுத்து, குருசாமி, ராதாகிருஷ்ணன், மகாலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story