நெல்லை மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்


நெல்லை மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 2 March 2017 2:45 AM IST (Updated: 2 March 2017 12:38 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

ஆலங்குளம்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் நடந்த விழாவையொட்டி, ஆலங்குளம், நெட்டூர், நல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் பூங்கோதை எம்.எல்.ஏ. தி.மு.க. கொடியேற்றினார். ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரி, நெட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்தார்.

இதையொட்டி ஆலங்குளம் பஸ் நிலையம் அருகே நடைபெற்ற கூட்டத்துக்கு பூங்கோதை எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் செல்லத்துரை முன்னிலை வகித்தார். நகர செயலாளர் நெல்சன் வரவேற்றுப் பேசினார். மாநில பேச்சாளர் நெல்லை முத்து பேசினார். கூட்டத்தில் செல்லத்துரை, அருணாசலம், அண்ணாவி காசிலிங்கம், லாலா மணி, கதிர்வேல், ஜி.செல்வன், ஆசீர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சங்கரன்கோவில்

சங்கரன்கோவிலில் நகர தி.மு.க. சார்பில் நடைபெற்ற விழாவுக்கு சங்கரன்கோவில் நகர செயலாளர் சங்கரன் தலைமை தாங்கினார். விழாவை முன்னிட்டு பஸ் நிலையம் அருகே பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. போக்குவரத்து பணிமனை முன்பு தி.மு.க. கொடியேற்றப்பட்டது. அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் அணிவிக்கப்பட்டன. பவுல் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கூட மாணவ-மாணவியர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

தென்காசி

தென்காசி நகர தி.மு.க சார்பில் நடந்த விழாவையொட்டி காந்தி சிலை முன்பு தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தென்காசி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 5 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் அணிவிக்கப்பட்டன. பள்ளிக்கூட குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் சாதிர் தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கோமதி நாயகம் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அம்பை

அம்பை நகர தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அம்பை நகர செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். அம்பை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 4 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் அணிவிக்கப்பட்டன. தொடர்ந்து அம்பை ஆர்ச் மற்றும் புதுக்கிராமம் தெரு, சுப்பிரமணியபுரம் பொத்தை, அய்யனார் குளம் தெரு ஆகிய இடங்களில் தி.மு.க. கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

விக்கிரமசிங்கபுரம்-இட்டமொழி


விக்கிரமசிங்கபுரம் நகர தி.மு.க. அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார்.

தி.மு.க. கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இட்டமொழி பஸ் நிறுத்தத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தி.மு.க. மாவட்ட பிரதிநிதி லிங்கேசன் தலைமை தாங்கினார். பகுத்தறிவு பாசறை நாங்குநேரி ஒன்றிய அமைப்பாளர் சோ.கந்தசாமி தி.மு.க. கொடியேற்றி இனிப்பு வழங்கினார்கள். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Next Story