ஆதிவாசி மக்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி


ஆதிவாசி மக்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 2 March 2017 3:00 AM IST (Updated: 2 March 2017 12:39 AM IST)
t-max-icont-min-icon

ஆதிவாசி மக்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கை கழுவுவது குறித்து இளம் செஞ்சிலுவை சங்கத்தினர் விளக்கம்

கூடலூர்,

கவுண்டன்கொல்லி ஆதிவாசி மக்களுக்கு சுகாதாரம் குறித்து இளம் செஞ்சிலுவை சங்கத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், கை கழுவுவது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.

இளம் செஞ்சிலுவை சங்கம்

கூடலூர், பந்தலூர் தாலுகாவில் உள்ள 30 பள்ளிக்கூடங்களில் இருந்து இளம் செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த 250 மாணவ–மாணவிகள் ஒன்றிணைந்து கூடலூர் அருகே கவுண்டன்கொல்லி ஆதிவாசி மக்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் முருகேசன், சேகர் ஆகியோர் கலந்து கொண்டு பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை மற்றும் செஞ்சிலுவை சங்க பணிகள் குறித்து விளக்கினர்.

இதையடுத்து, அப்பகுதியில் பரவி கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை மாணவ–மாணவிகள் அகற்றினர். மேலும் பள்ளிக்கூட வளாகத்தை தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.

செயல்முறை விளக்கம்

தொடர்ந்து கவுண்டன்கொல்லி பழங்குடியின மக்களை செஞ்சிலுவை சங்க மாணவ– மாணவிகள் சந்தித்தனர். அப்போது சுற்றுப்புற சுகாதாரத்தை பேணுதல் மற்றும் தன் சுத்தத்தை பின்பற்றுவதால் நோய்கள் தாக்காமல் பாதுகாப்பாக வாழலாம் என விழிப்புணர்வை ஏற்படுத்தினர். உணவு சாப்பிடுவதற்கு முன்பாக கைகளை நன்றாக கழுவ வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கைகளை நன்றாக கழுவுவது குறித்து செஞ்சிலுவை சங்க மாணவர்கள் ஆதிவாசி மக்களுக்கு செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.

பின்னர் மாணவ–மாணவிகளின் நடனம், பாட்டு, கவிதை உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சந்திரகுமார், உதயகுமார், அருண்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.


Next Story