இ.எஸ்.ஐ. திட்டத்தில் ரூ.21 ஆயிரத்திற்கு கீழ் மாத சம்பளம் பெறும் தொழிலாளர்கள் சந்தா செலுத்தி பயன்பெறலாம்
ரூ.21 ஆயிரத்துக்கு கீழ் மாத சம்பளம் பெறும் தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ. திட்டத்தில் பதிவு செய்து சந்தா செலுத்தி பயன் பெறலாம் என்று கோவை துணை மண்டல இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சிறப்பு அழைப்பாளராக இ.எஸ்.ஐ. நிறுவனத்தின் கோவை துணை மண்டல இயக்குனர் ஜோசப் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:–
இ.எஸ்.ஐ. நிறுவனம், கடந்த ஜனவரி மாதம் 1–ந்தேதி முதல் இ.எஸ்.ஐ. திட்டத்தின் கீழ் வரும் தொழிலாளர்களுக்கான சம்பள உச்சவரம்பை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்தி மத்திய அரசிதழில் வெளியிட்டுள்ளது. எனவே தொழிலதிபர்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ரூ.21 ஆயிரத்துக்கு கீழ் மாத சம்பளம் பெறும் தொழிலாளர்களை இ.எஸ்.ஐ. திட்டத்தின் கீழ் உடனடியாக பதிவு செய்து சந்தா தொகையை மாதந்தோறும் செலுத்த வேண்டும்.
சிறப்பு திட்டம்இதுவரை இ.எஸ்.எஸ். திட்டத்தில் சேராத தொழிலாளர்களை சேர்க்கவும், இதுவரை சந்தா செலுத்தாத தொழிலதிபர்கள் சந்தா செலுத்தவும் இ.எஸ்.ஐ. நிறுவனத்தால் ‘தன்னார்வ பதிவுத்திட்டம்’ (SPREE) என்ற சிறப்பு திட்டம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் எந்த வித அபராதமும் இன்றி சந்தா செலுத்தி கொள்ளலாம். இந்த திட்டம் வருகிற மார்ச் 31–ந்தேதி வரை செயல்பாட்டில் இருக்கும்.
மேலும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இதுவரை இ.எஸ்.ஐ. திட்டத்தின் கீழ் பதிவு செய்யாத தகுதியுள்ள நிறுவனங்கள் இந்த திட்டத்தில் இணைந்து சந்தா தொகையை செலுத்தினால், கடந்த கால இ.எஸ்.ஐ. சட்ட மீறல்களுக்கான நடவடிக்கைகளில் இருந்து தவிர்த்துக் கொள்ளலாம். தற்போது ஆன்–லைன் மூலம் அனைத்து சேவைகளையும் பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தொழில்அதிபர்கள் மற்றும் இ.எஸ்.ஐ. நிறுவன கிளைகளின் மேலாளர்கள் குமார், சிவக்குமார் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் செந்தில்வேல் நன்றி கூறினார்.