பா.ம.க. சார்பில் மதுக்கடை பலகைகள் மீது ‘ஸ்டிக்கர்’ ஒட்டும் போராட்டம்


பா.ம.க. சார்பில் மதுக்கடை பலகைகள் மீது ‘ஸ்டிக்கர்’ ஒட்டும் போராட்டம்
x
தினத்தந்தி 2 March 2017 4:15 AM IST (Updated: 2 March 2017 1:36 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் மதுக்கடை வழிகாட்டி பலகைகள் மீது ‘ஸ்டிக்கர்’ ஒட்டும் போராட்டம் நடத்திய 387 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருக்கும் அரசு டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. இந்த தீர்ப்பை விளக்கும் வகையில் மதுக்கடை வழிகாட்டி பலகைகள் மீது இது அகற்றப்பட வேண்டிய சட்ட விரோத மதுக்கடை என்ற ‘ஸ்டிக்கர்’ ஒட்டும் போராட்டம் நேற்று தமிழகம் முழுவதும் பா.ம.க. சார்பில் நடைபெற்றது.

விழுப்புரம்– திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு நேற்று பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் தங்கஜோதி தலைமை தாங்கினார். இதில் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் அன்புமணி, பா.ம.க. மாநில துணைத்தலைவர் ஹரிகரன், மாவட்ட செயலாளர் புகழேந்தி, மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் தன்ராஜ், நகர தலைவர் ராஜா, செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், எழிலரசன், ஸ்டாலின், சந்தோஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

387 பேர் கைது

இவர்கள் அனைவரும் மதுக்கடைகளை மூடக்கோரி கோ‌ஷம் எழுப்பியவாறு அந்த மதுக்கடை வழிகாட்டி பலகை மீது ‘ஸ்டிக்கர்’ ஒட்டி போராட்டம் செய்தனர். உடனே விழுப்புரம் மேற்கு போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 39 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதேபோல் சூரப்பட்டில் ஒன்றிய தலைவர் ஜெயராஜ் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேரும், அரியலூர் திருக்கையில் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரும், செஞ்சியில் மாநில துணை பொதுச்செயலாளர் சிவக்குமார் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரும், மற்றொரு இடத்தில் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 28 பேரும், காணைகுப்பத்தில் ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 9 பேரும், அவலூர்பேட்டையில் முன்னாள் மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேரும், கிளியனூரில் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 42 பேரும், கள்ளக்குறிச்சியில் மாநில துணை தலைவர் பாண்டியன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரும், திண்டிவனத்தில் நகர செயலாளர் ரமேஷ் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரும், மரக்காணத்தில் மாவட்ட செயலாளர் சேது தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 34 பேரும், ஆனத்தூரில் பசுமை தாயகம் அமைப்பின் மாவட்ட தலைவர் கார்த்திக் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேரும், அசோகபுரியில் ஒன்றிய செயலாளர் மணிபாலன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 3 பேரும், செட்டித்தாங்கலில் மாநில துணை செயலாளர் காசாம்பு பூமாலை தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 61 பேரும், உளுந்தூர்பேட்டையில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேரும், பெரியசெவலையில் ஒன்றிய செயலாளர் கோபி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 14 பேரும், வளத்தியில் ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரும் ஆக மொத்தம் 387 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story