சென்னையில் குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது


சென்னையில் குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது
x
தினத்தந்தி 1 March 2017 8:52 PM (Updated: 1 March 2017 8:51 PM)
t-max-icont-min-icon

குற்றவாளிகள் 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் 1 ஆண்டு சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.

சென்னை,

சென்னையில் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நேற்று இதுபோன்ற குற்றவாளிகள் 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் 1 ஆண்டு சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.

லோகேஷ் (வயது 26), குமார் (24), மணிகண்டன் (24), சந்திரசேகர் (31) ஆகிய 4 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகள் ஆவார்கள். 

Next Story