பெட்டி, படுக்கைகளுடன் வந்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு மாணவர்கள் போராட்டம்
புதிதாக கட்டப்பட்ட விடுதியை திறக்கக்கோரி பெட்டி, படுக்கைகளுடன் வந்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
திருச்சி,
திருச்சி உறையூரில் வாடகை கட்டிடத்தில் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 140 மாணவர்கள் தங்கி உள்ளனர். இந்த மாணவர் களுக்காக பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி வளாகத்தில் புதிதாக விடுதி ஒன்று கட்டப்பட்டது. இந்த விடுதியை கட்டி 4 ஆண்டுகளாகியும் இதுவரை திறக்கப்படவில்லை. இந்த நிலையில் விடுதி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு பெட்டி, படுக்கைகளுடன் வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்தும், படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் பேச்சுவார்த்தை
வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் விடுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. சாப்பாடும் தரமாக இல்லை. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. ஆகவே பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட விடுதியை உடனே திறக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் அங்கு சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக கூறினார்கள்.
ஆனால் அவர்கள் செல்ல மறுத்ததால் போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ஒரு சில மாணவர்கள் மட்டும் மாவட்ட சமூகநல அலுவலர் முத்துவடிவேலை சந்தித்து மனு அளித்தனர். இந்த மாதத்துக்குள் விடுதியை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story