நாகர்கோவில் அருகே பரிதாபம்: வீட்டு சுவர் இடிந்து விழுந்து கணவன் -மனைவி பலி
நாகர்கோவில் அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்து கணவன்-மனைவி பலியானார்கள்.
ஈத்தாமொழி,
நாகர்கோவில் அருகே இலந்தையடிதட்டு பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 42). சென்ட்ரிங் காண்டிராக்டர். இவருடைய மனைவி பபிதா (34). இவர்களுக்கு பபின் (11), சுபின் (9) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். பபின் 6-ம் வகுப்பும், சுபின் 4-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
ஜெயக்குமார் அதே பகுதியில் புதிதாக ஒரு வீடு கட்டி மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். ஜெயக்குமாரின் தாயார் பூர்வீக வீட்டில் வசித்தார். அவருக்கு கடந்த 1 மாதமாக உடல்நிலை மோசமாக இருந்தது. இதனால் தாயாரை கவனிப்பதற்காக ஜெயக்குமார், மனைவி, குழந்தைகளுடன் பூர்வீக வீட்டில் 1 மாதமாக வசித்தார். இந்த வீடு, மண்சுவரால் கட்டப்பட்டு, மேற்கூரை ஓடுகளால் ஆனது.
சுவர் இடிந்தது
நேற்று முன்தினம் இரவு ஜெயக்குமார், பபிதாவுடன் ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்தார். மற்றொரு அறையில் பபின், சுபினும், இன்னொரு அறையில் ஜெயக்குமாரின் தாயாரும் தூங்கினர். இந்தநிலையில் நள்ளிரவு நேரத்தில் ஜெயக்குமார் தூங்கி கொண்டிருந்த அறையில் மண் சுவர் இடிந்து விழுந்தது.
ஜெயக்குமார், பபிதாவின் தலையில் மண்சுவர் விழுந்து அமுக்கியது. இதனால் கணவன்-மனைவி 2 பேரும் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டனர். இந்த சத்தம் கேட்டு கண் விழித்த மகன்கள் ஓடி வந்தனர். மண்சுவருக்குள் சிக்கி உயிருக்காக போராடிய தாய், தந்தையை பார்த்து கதறி அழுதனர்.
மனைவியுடன் பலி
உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, தலையில் பலத்த காயங்களுடன் கிடந்த ஜெயக்குமார், பபிதாவை மீட்டு சிகிச்சைக்காக ஈத்தாமொழியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர், 2 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதனையடுத்து உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த ஈத்தாமொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வீட்டு சுவர் இடிந்து விழுந்து கணவன்-மனைவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story