வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி 11 இடங்களில் ஆர்ப்பாட்டம்


வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி 11 இடங்களில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 March 2017 3:45 AM IST (Updated: 2 March 2017 2:22 AM IST)
t-max-icont-min-icon

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி திருவாரூர் மாவட்டத்தில் 11 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் மாசிலாமணி தெரிவித்தார்.

திருவாரூர்,

திருவாரூரில் விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் மாசிலாமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வறட்சி காரணமாக காவிரி டெல்டா உள்பட தமிழகம் பெரும் பாதிப்பை அடைந்துள்ளது. இதனால் விவசாய சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. பயிர் கருகியதால் மனமுடைந்த விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் விவசாய தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஆனால் ஏக்கருக்கு ரூ.5 ஆயிரத்து 465 நிவாரணம் வழங்கப்படு்ம் என அரசு அறிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டம்

எனவே வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.20 ஆயிரமும், மரணமடைந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும் வழங்க வேண்டும். சென்ற ஆண்டு பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும். பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (வெள்ளிக்கிழமை) திருவாரூர் மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் ஆர்்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story