அகற்றப்பட வேண்டிய டாஸ்மாக் மதுபான கடை என ‘ஸ்டிக்கர்’ ஒட்ட வந்த பா.ம.க.வினர் கைது


அகற்றப்பட வேண்டிய டாஸ்மாக் மதுபான கடை என ‘ஸ்டிக்கர்’ ஒட்ட வந்த பா.ம.க.வினர் கைது
x
தினத்தந்தி 2 March 2017 4:30 AM IST (Updated: 2 March 2017 2:22 AM IST)
t-max-icont-min-icon

அகற்றப்பட வேண்டிய டாஸ்மாக் மதுபான கடை என்ற வாசகம் அடங்கிய ‘ஸ்டிக்கர்’ ஒட்ட வந்த பாட்டாளி மக்கள் கட்சியினர் 27 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்,


தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை வருகிற 31-ந்தேதிக்குள் அகற்ற உத்தரவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் பாஸ்கரன், நகர செயலாளர் ராக்கி முருகேசன் ஆகியோர் தலைமையில் நேற்று பா.ம.க.வினர் சிலர் உச்ச நீதி மன்ற உத்தரவுப்படி இது அகற்றப்பட வேண்டிய மதுபான கடை என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்களை, கரூர் பஸ் நிலைய ரவுண்டானா அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் ஒட்ட வந்தனர்.

தள்ளு-முள்ளு

அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பா.ம.க.வினருக்கும், போலீசாருக்கும் சிறிது நேரம் தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து ஒரு பெண் உள்பட 27 பேரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக அவர்கள் ரவுண்டானா அருகே சிறிது நேரம் கையில் பதாகைகளை ஏந்திய படி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


Next Story