பழுதடைந்த கடைகளை சீரமைத்து வணிக வளாகம் கட்ட வேண்டும் சங்க கூட்டத்தில் தீர்மானம்
கரூர் காமராஜ் மார்க்கெட்டில் உள்ள பழுதடைந்த கடைகளை சீரமைத்து வணிக வளாகம் கட்ட வேண்டும் என்று கரூர் நகர உணவு பொருள் வணிகர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூர்,
கரூர் நகர உணவு பொருள் வணிகர்கள் சங்கம் மகாசபை கூட்டம் கரூரில் மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமையில் நடைபெற்றது. கரூர் மாவட்ட அனைத்து தொழில் மற்றும் வர்த்தக சங்கத்தின் மாவட்ட தலைவர் வக்கீல் கே.ராஜூ சிறப்புரை ஆற்றினார்.
நெல் அரிசி வியாபாரிகள் சங்க செயலாளர் கே.எஸ்.வெங்கட்ராமன், கரூர் நகர உணவு பொருட்கள் வணிகர்கள் சங்க துணைத்தலைவர்கள் கமலநாதன், பெருமாள்பாபு முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் ராமசாமி, துணை செயலாளர் நாகராஜன், இணை செயலாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சேவை கட்டணம்
கூட்டத்தில் கரூர் காமராஜ் மார்க்கெட்டில் உள்ள கடைகள் பழுது அடைந்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. அதனை சீரமைத்து ஒருங்கிணைந்த வணிக வளாகம் கட்ட வேண்டும். உணவு பாதுகாப்பு சட்டத்தில் உள்ள வணிகர்களை பாதிக்கக்கூடிய சரத்துகளை நீக்கி சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
பிரதமர் அறிவித்துள்ள பணமில்லா பரிவர்த்தனையை வரவேற்கி றோம். அதேநேரத்தில் ஸ்வைபிங் எந்திரங்களை வியாபாரிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும். அதற்கான வாடகை மற்றும் சேவை கட்டணத்தை ரத்து செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story