தமிழக விவசாயிகளுக்கு எதிராக எந்த திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வராது


தமிழக விவசாயிகளுக்கு எதிராக எந்த திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வராது
x
தினத்தந்தி 2 March 2017 4:15 AM IST (Updated: 2 March 2017 2:23 AM IST)
t-max-icont-min-icon

தமிழக விவசாயிகளுக்கு எதிராக எந்த திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வராது என்று கும்பகோணத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

கும்பகோணம்,

பாரதீய ஜனதா கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா நூற்றாண்டு விழா, மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் கட்சியில் திரளானோர் இணையும் விழா என முப்பெரும் விழா கும்பகோணம் சாரங்கபாணி கீழவீதியில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரி.பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது-

ஹைட்ரோ கார்பன்

இந்தியாவில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க 31 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழகத்தில் நெடுவாசல் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 2007-ம் ஆண்டு ஜூலை மாதம் 17-ந்தேதி இடம் தோ்வு செய்யப்பட்டது. பின்னர் 2008-ம் ஆண்டு ஆய்வு நடத்தலாம் என அனுமதியளித்தது. ஆனால் அப்போது இருந்த அரசு கேள்வி கேட்டிருக்கலாம். 2016-ம் ஆண்டு டிசம்பா் மாதம் 30-ந்தேதி நெடுவாசலில் நிலம் கையகப்படுத்த புதுக்கோட்டை மாவட்ட கலெக்டருக்கு மத்திய அரசு ரூ.11 லட்சத்து 20 ஆயிரம் வழங்கியுள்ளது. தமிழ் சமுதாயத்திற்கும், தமிழக விவசாயிகளுக்கும், தமிழக மக்களுக்கும் எதிராக எந்ததிட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வராது. அனுமதியும் அளிக்காது.

பயங்கரவாதிகள்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பயங்கரவாதிகள் நுழைந்தது போல், தற்போது நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து நடந்து வரும் போராட்டத்திலும் பயங்கரவாதிகள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்தி வருகின்றனா். தமிழக அரசு விவசாயிகளின் இறப்பை பற்றி கவலை படவில்லை. ஆடு மாடுகளை போல் எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்து கோடி கணக்கில் விலை பேசி, அரசை தக்க வைத்து கொண்டுள்ளது. தற்போது கட்சி தொடங்கியுள்ள தீபா, கட்சியின் பதவியை டிரைவருக்கும், டிரைவாின் மனைவிக்கும் தருகிறாா். அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளை புறக்கணித்தால் மட்டுமே தமிழகம் வளர்ச்சி அடையும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story