பெரம்பலூரில் நீதியின் குரல் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்,
கேரளாவில் நடைபெற்று வரும் படுகொலை சம்பவங்களையும், கம்யூனிஸ்டு கட்சிகளின் நடவடிக்கையையும் கண்டித்து பெரம்பலூர் புது பஸ்நிலைய பகுதியில் நீதியின் குரல் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்.எஸ்.எஸ். மண்டல தலைவர் பிரசன்னம் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் கருணாமூர்த்தி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், கேரளாவில் நடைபெற்று வரும் படுகொலை சம்பவங்களை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. இதில் நீதியின் குரல் அமைப்பு நிர்வாகிகள், பா.ஜ.க., விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர் கலந்து கொண்டனர்.

Next Story