பெரம்பலூர் மாவட்டத்தில் ஏரிகளில் மராமத்து பணி செய்ய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்


பெரம்பலூர் மாவட்டத்தில் ஏரிகளில் மராமத்து பணி செய்ய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 2 March 2017 2:24 AM IST (Updated: 2 March 2017 2:23 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏரிகளில் மராமத்து பணி செய்ய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் மராமத்து பணிகள் செய்யப்பட உள்ளது. முதல்கட்டமாக குரும்பலூர், அரணாரை, பெரம்பலூர், துறைமங்கலம், எழுமூர், தழுதாழை, சாத்தனவாடி, தொண்டப்பாடி, செஞ்சேரி ஆகிய 9 ஏரிகளில் மராமத்து பணிகள் செய்யப்படுகிறது. மராமத்து பணி செய்ய முன்வரும் தனிநபர், நிறுவனம், விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், ஆயக்கட்டுதாரர்களின் சங்கம் உள்ளிட்டோர் தங்களது விண்ணப்பத்தை பொதுப் பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் உதவி செயற்பொறியாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும். மராமத்து பணி செய்ய தன்னெழுச்சியாக முன்வருவோர், மராமத்து பணிக்கு ஆகும் செலவில் 10 சதவீதத்தை தொகையாகவோ அல்லது உடல் உழைப்பாகவோ அளிக்கலாம். மேலும், மேற்குறிப்பிடப்பட்ட 9 ஏரிகள் தவிர பிற ஏரிகளில் மராமத்து பணி மேற்கொள்ள விரும்புபவர்களும் தங்களது விண்ணப்பத்தை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளருக்கு அனுப்பி வைக்கலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Next Story