சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்–லைன் வாயிலாக ஆவணங்கள் வழங்கும் முறை அமல்


சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்–லைன் வாயிலாக ஆவணங்கள் வழங்கும் முறை அமல்
x
தினத்தந்தி 2 March 2017 4:15 AM IST (Updated: 2 March 2017 2:24 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆவணங்களை ஆன்–லைனில் வழங்கும் முறை நேற்று முதல் அமலுக்கு வந்து உள்ளது. நாமக்கல் போலீஸ் நிலையத்தில் இதனை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராமசாமி தொடங்கி வைத்தார்.

நாமக்கல்,


நாமக்கல் மாவட்டத்தில் சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆவணங்களை ஆன்–லைனில் வழங்கும் முறை நேற்று முதல் அமலுக்கு வந்து உள்ளது. நாமக்கல் போலீஸ் நிலையத்தில் இதனை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராமசாமி தொடங்கி வைத்தார்.

ஆன்–லைனில் ஆவணங்கள்


தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆவணங்களை ஆன்–லைனில் வழங்கும் முறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 25 போலீஸ் நிலையங்களிலும் இந்த முறை நேற்று அமலுக்கு வந்தது. நாமக்கல் போலீஸ் நிலையத்தில் இந்த திட்டத்தை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராமசாமி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக நிவாரணம் பெறும் வகையில், வழக்கிற்கு தேவையான ஆவணங்களை காவல்துறை ஆன்–லைனில் வழங்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதன்பேரில் விபத்து வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை, வாகன பதிவு சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், காப்புறுதி சான்றிதழ், வணிக தகுதி சான்றிதழ் மற்றும் அனுமதி, மாதிரி வரைபடம், மோட்டார் வாகன ஆய்வறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை, விபத்து பதிவு நகல், இறுதி அறிக்கை உள்ளிட்ட 12 ஆவணங்கள் ஆன்–லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

முதல் கட்டமாக மோட்டார் வாகன விபத்து வழக்கு விசாரணைக்கு வரும் கோர்ட்டு மற்றும் இன்சூரன்சு நிறுவனங்கள் ஆன்–லைனில் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் 1–ந் தேதி முதல் இன்சூரன்சு நிறுவனங்கள் விபத்து வழக்குகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் காலதாமதம் இன்றி இழப்பீடு எளிதில் பெற முடியும்.

548 பேர் சாலை விபத்தில் சாவு


நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 2,307 விபத்து வழக்குகள் பதிவாகி உள்ளன. இவற்றில் 548 பேர் உயிரிழந்து உள்ளனர். 2,479 பேர் காயம் அடைந்து உள்ளனர். இந்த ஆண்டு கடந்த 2 மாதத்தில் 328 விபத்து வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 52 பேர் உயிரிழந்து உள்ளனர். 355 பேர் காயம் அடைந்து உள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டில் விபத்துக்கள் குறைந்து உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.


Next Story