கேரளாவில் அதிகரித்து வரும் அரசியல் படுகொலைகளை கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி,
கேரளாவில் அதிகரித்து வரும் அரசியல் படுகொலைகளை கண்டித்து இந்து அமைப்புகளின் சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின்சேலம் கோட்ட இணை தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். தர்மபுரி மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் ரங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ஜனதா இளைஞர் அணி மாநிலதலைவர் வினோஜ்செல்வம், இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுப்ரமணியன், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சேலம் கோட்ட பொருளாளர் முருகேசன், விசுவஇந்து பரிஷத் மாநில அமைப்பாளர் சைதன்யதாஸ், பா.ஜனதா மாவட்ட தலைவர் வரதராஜன், மாவட்ட பொதுசெயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். கேரளா மாநிலத்தில் அதிகரித்து வரும் அரசியல் கொலைகளை தடுக்க வேண்டும். இந்த கொலைகளில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பபட்டன.

Next Story