மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தி.மு.க.வினர் கொண்டாட்டம்


மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தி.மு.க.வினர் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 2 March 2017 4:15 AM IST (Updated: 2 March 2017 2:25 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தி.மு.க.வினர் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சேலம்,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நேற்று தி.மு.க.வினரால் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், மரக்கன்றுகள் நட்டு வைத்தும் கொண்டாடப்பட்டது. சேலம் மாநகராட்சி 14–வது வார்டு தி.மு.க. சார்பில் சங்கர்நகரில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் சங்கர்நகர் சுந்தரம் தலைமையில் மத்திய மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாஷா, குமாரசாமிப்பட்டி பகுதி தி.மு.க. செயலாளர் சாந்தமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சாலையோரம் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். மேலும், பொதுமக்களுக்கு இனிப்புகளையும், வீடுகளில் வளர்ப்பதற்காக மரக்கன்றுகளையும் தி.மு.க.வினர் வழங்கினர்.

மு.க.ஸ்டாலின் 65–வது வயதை குறிக்கும் வகையில் சேலம் மாநகராட்சி 14–வது வார்டுக்கு உட்பட்ட வின்சென்ட், குமாரசாமிப்பட்டி, மரவனேரி, ராஜாராம்நகர், சங்கர்நகர் பகுதியில் மொத்தம் 650 மரக்கன்றுகள் நட்டு வைத்து தொடர்ந்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்திருப்பதாக தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில், தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் தீபக், பூபதி, கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மரக்கன்றுகள்


சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி பகுதி தி.மு.க. சார்பில் அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கி கொண்டாடப்பட்டது. அஸ்தம்பட்டி பகுதி செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சங்கீதா, மற்றும் 12–வது வார்டு பொறுப்பாளர் நீதிவர்மன், நிர்வாகிகள் மணிவண்ணன், சிவசண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

Next Story