குழந்தைகள் திருமணத்தை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் கோட்டாட்சியர் வலியுறுத்தல்


குழந்தைகள் திருமணத்தை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் கோட்டாட்சியர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 March 2017 3:00 AM IST (Updated: 2 March 2017 2:35 AM IST)
t-max-icont-min-icon

குழந்தைகள் திருமணத்தை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் மக்கள் தொடர்பு முகாமில் கோட்டாட்சியர் வலியுறுத்தல்

கண்டமங்கலம்,

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் வழுதாவூரில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு விக்கிரவாண்டி தாசில்தார் அருங்குளவன் தலைமை தாங்கினார். சமூகநல தாசில்தார் பார்த்திபன், குடிமை பொருள் வழங்கல் தாசில்தார் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல துணை தாசில்தார் ஆனந்தகுமார் வரவேற்றார்.

விழுப்புரம் கோட்டாச்சியர் ஜீனத்பானு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, இருதய நோய், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ‘இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்களை மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். குழந்தைகள் திருமணத்தை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். வரதட்சணை கொடுமையால் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். இதனை தடுப்பதற்கு அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும்’ என்றார்.

பின்னர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். முகாமில் கிராம நிர்வாக அலுவலர்கள் கலிவரதன், ராமதாஸ், சரவணன, மணிகண்டன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் வருவாய் ஆய்வாளர் முத்தம்மாள் நன்றி கூறினார்.


Next Story